தாந்தாமலை முருகனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தீர்த்தோற்சவம்.

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்வம் இன்று(15) வியாழக்கிழமை காலை ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெற்றது.

கடந்த மாதம் 25ம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. இறுதிநாள் திருவிழா நேற்று(14) புதன்கிழமை இரவு இடம்பெற்றது. இத்திருவிழாவிற்கான உபயத்தினை முனைக்காடு கிராமமக்கள் வழங்கியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்து திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.

இன்று காலை முருகப்பெருமானுக்கு பூசை ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, தாந்தாமலை முருகப்பெருமானின் புண்ணிய தீர்த்தக்குளத்தில் திருவோண நட்சத்திரத்தில் 6மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பொன்னூஞ்சல் நிகழ்வும் இடம்பெற்றது.