கிழக்கிலங்கையில் சிறப்புற்றதும் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் ஆலயத்திற்கு பாதயாத்திரிகையாகவும் சென்று வருகின்றனர்.
கடந்த 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் உற்சவம், எதிர்வரும் 14.08.2019ம் திகதி இறுதித்திருவிழா இடம்பெற்று அடுத்த நாள் காலை(15.08.2019) 06மணிக்கு திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தோற்சமும் நடைபெற்று நிறைவுபெறவுள்ளது.
திருவிழாவிலும், தீர்த்தோற்சவத்தினையும் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் ஆலயத்திற்கு சென்றுவருகின்றனர். இதற்கான விசேட போக்குவரத்துக்கள் செய்யப்பட்டுள்ளமையுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும், விசேடமாக கண்காணிப்பதற்காக இவ்வருடம் ஒளிப்பதிவு கமெறாக்கள் பொருத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.