இலங்கை அபிவிருத்தியடைய தேசிய ஒற்றுமை அவசியம் – ஸ்ரீநேசன்

இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு எனும் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியம் என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தபோதிலும் நாட்டின் பெயர் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றே கூறப்பகிறது.

அபிவிருத்தியடைந்த நாடு என்ற சொற்பதத்தை நாம் எப்போது கூறப்போகின்றோம். தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியம் என்பன கட்டியெழுப்பப்பட்ட பின்னரே அவ்வாறு கூற முடியும்.

தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியம் என்பன கட்டியெழுப்பப்படாத நிலையில் நாம் செய்யும் அபிவிருத்திகள் தற்காலிக அபிவிருத்தியாகவே இருக்கும்.

தேசிய இனப்பிரச்சினை நிலையாக தீர்க்கப்பட வேண்டும். அதைவிடுத்து ஏற்றுமதிகளை செய்தாலும் அவை நிலையான அபிவிருத்தியாகவே காணப்படும். அபிவிருத்திக்கு முதலில் முக்கியம் தேசிய ஒற்றுமையே” என்றும் அவர் தெரிவித்தார்.