மட்டக்களப்பு, நாவற்குடா கோர விபத்தில் இருவர் பலி ; ஒருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, நாவற்குடா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஏறாவூரிலிருந்து கோழிகளை ஏற்றிச் சென்ற வானம் கான்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில்  மணல் ஏற்றுக் கொண்டு முன்னாள் சென்ன டிப்பர் வாகனத்துடன் மோதுண்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிப்பர் வானத்தின் டயர் வெடித்ததன் காரணமாகவே இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.