ஆசிரியர்களின் ஆங்கில மொழி ஆற்றலை அபிவிருத்தி செய்வதற்கு புதிய திட்டம்

ஆசிரியர்களின் ஆங்கில மொழி ஆற்றலை அடையாளம் காணுதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பிரிட்டிஷ் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. முதல் கட்டத்தில் ஒன்பது மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்த 500 ஆசிரியர்கள் உள்வாங்கப்படுவர்.

திறமையான ஆற்றலை வெளிப்படுத்தும் ஆசிரியர்களுக்காக ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.