சமுர்த்தி சிறுவர் கெக்குளு கலை இலக்கிய போட்டி

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வலயப் பிரிவில் சமுர்த்தி  சிறுவர்ளுக்கான கெக்குளு கலை இலக்கிய போட்டி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர்  பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  மண்முனை மேற்கு பிரதேச  உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கலந்துகொண்டு இங்கு வருகைதந்த சிறுவர்களுக்கு கல்வி ஆக்கத் திறன்களை வளர்ததல் தொடர்பில் கருத்துக்களை கூறி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சமுர்த்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் வருடந்தோறும் நடாத்தப்படும் இந்த சிறுவர் கெக்குழு போட்டியில் குறு நாடகம், கிராமிய நடனம், நாட்டார் பாடல், கட்டுரை, பேச்சு, அறிப்புபாளர், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் வயது அடிப்படையில் நடைபெற்றது.

இப் போட்டிகளுக்கு நடுவர்களாக ஆசிரிய ஆலோசகர் த.கண்ணன், ஆசிரியர் கி.மஞ்சுளா, கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜா போன்ரே் கலந்துகொண்டனர்.

வலய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் 3ம் இடம் வரை தெரிவுசெய்யப்படும் சிறுவர்கள் பிரதேச மட்ட போட்டியில் பங்குபற்றுவதுடன் பிரதேச மட்ட போட்டியில் தெரிவுசெய்யப்படுவோர் மாவட்டமட்ட போட்டியிலும், மாவட்ட மட்ட போட்டியில் தெரிவுசெய்யப்படுவோர் தேசிய மட்ட போட்டியில் பங்குபெறுவர்.