(துஸ்யந்தன்)
கடந்தவருடம் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் காவரணில் கடமையில் இருந்தபோது ஐ.எஸ். தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்ட்ட அம்பாறை பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் கணேஸ் தினேஸ் நினைவாக பெரியநீலாவணை பிரதானவீதியில் பயணிகள் தரித்து நிற்கும் பேரூந்து தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெரியநீலாவணைக் கிராம இளைஞர்களினால் கல்முனை –மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் சாஜன் தினேஸ் ஞாபகார்த்த பேரூந்து தரிப்ப்pடம் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்ட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.குபேரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி இந்திக உதயங்க கலந்துகொண்டார்.
அத்துடன் மதத்தலைவர்களான கல்முனை விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ணதேரர், பெரியநீலாவணை ஆலையடிச் சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.விஜயவர்மக்குருக்கள், பெரியநீலாவணை அமெரிக்க மிஷன் போதகர் வண.ஜீ.ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு படுகொலை செய்யப்ட்ட பொலிஸ் சாஜன் தினேஸ்சின் தந்தையாரினால் பேரூந்து தரிப்பிடம் நாடவெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்ட்டது. குறித்த தரிப்ப்pடம் இரண்டரை இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு பேசிய கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக உதயங்க..
இந் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர். எமது பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் மற்றுமொரு பயங்கரவாத குழுவினால் மட்டக்களப்பு வவுணதீவில் கொடூரமாக படுகொலை செய்யப்ட்டிருந்தனர். இதனையிட்டு மனம் வருந்துகின்றேன்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைப்பாதுகாக்கவேண்டும். அதற்காக பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத்தெரிவித்தார்.