கூட்டமைப்பின் கேள்வி-பதில் நிகழ்வு

தமிழ்மக்களின் நீண்டகால கேள்விகளாகவும், ஆதங்கங்களையும் மற்றும் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தலைமைகளிடம் நேரடியான கேள்வி-பதில் நிகழ்வும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) காலை 9.00மணிக்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழரசு கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து விதமான கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் விளக்கம்,தெளிவுரையினை ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கவுள்ளார்.
அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்குரிய தேவையான விளக்கவுரைகளையும், விடயங்களையும் நேரடியாக கேட்க முடியுமெனவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ,மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்துடன் வரவேற்புரையும் நடைபெறுமெனவும்  தெிவித்தார்.