போதையிலிருந்த 136 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, நேற்று (08) காலை 6.00 மணியிலிருந்து இன்று (09) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையில் காணப்பட்ட 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 05 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் காணப்பட்ட 7,802 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.