மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன்   இன்று வௌ்ளிக்கிழமை பகல்  கைது​செய்யப்பட்டுள்தாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் ​தெரிவித்தார்.

இச் சம்பவம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள புளியடிமடு பகுதியில் இடம்​பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் ​தெரிவித்தனர்.

அனுமதிப் பத்திரம் இருந்தும்  சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில்  உழவு இயந்திரத்தின் ​பெட்டியில் மண் ஏற்றிக்​கொண்டிருந்த​​​​​வேளையில் குறித்த நபர்களையும் உழவு இயந்திரத்தையும் தாம் ​கைதுசெய்து ​ ​பொலிஸ் நிலயம் ​கொண்டுவந்ததாகவும் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் ​தெரிவித்தார்

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாகவும் பொலிஸார் ​தெரிவித்தனர்.