மட்டு. வெல்லாவெளியில் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து  குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் உள்ள வாய்கால் பகுதியிலிருந்து குண்டு ஒன்றை மீண்டுள்ளனர்.

 

குறித்த குண்டை செயலிழக்க நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதுடன் இதனை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் செயலிழக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.