வெளிநாட்டவர்கள் எமது பகுதிகளிலுள்ள வளமான காணிகளைகையகப்படுத்துவதற்கான திட்டம்

 

இந்தஅரசாங்கம்; பாராளுமன்றத்தில் விசேடகாணிதிருத்தச் சட்டமசோதா ஒன்றைமுன்வைத்து வெளிநாட்டவர்கள் எமது பகுதிகளிலுள்ள வளமான காணிகளைகையகப்படுத்துவதற்கான திட்டத்தை அமுல்படுத்த எதிர்வரும் காலங்களில் திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தினால் எமது பிரதேசத்திலுள்ள வளமான காணிகள் அனைத்;தும் இல்லாமல் போகும். இதைதடுத்து நிறுத்துமாறு முன்னால் கிழக்கு மாகாண சபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் காணிகள் தொடர்பாக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதுதெரிவித்தார்.

இந்தம சோதாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பது இலங்கையர் அனைவரும் தமதுகாணிகளை தங்களுக்குரியதாக மாற்றுவதற்கும், காணிதொடர்பான ஒழுக்கங்களை அமுலாக்குவதற்கும், வெளிநாட்டவர்கள் இங்குள்ளகாணியை நேரடியாக வாங்குவதற்கும் இக்காணிசீர்திருத்தச் சட்டம் வழி வகுக்கும். இக்காணிசீர்திருத்தச் சட்டம் என்பது 2003ம்ஆண்டு, 2015ம்ஆண்டு, 2019.04ம் மாதம் போன்றகாலங்களில் முன் வைப்பதற்கு பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்ப்பின் மத்தியில் கைவிடப்பட்டன. முரண்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளதாகக் கூட சொல்லப்படுகின்றது.

இக் காணிச் சட்டமூலம் ஊடாக தேசிய,மாகாண,மாவட்டவளமானகாணிகள் அனைத்தையும் வெளிநாட்டவர்கள் வாங்குவதற்கு வழி வகுக்கும். குறிப்பாகதிருகோணமலை,அம்பாறை,மட்டக்களப்புமாவட்டங்களிலுள்ளவளமானகாணிகள் அனைத்தும் பொருளாதாரமுதலீடுஎன்னும் போர்வையில் வெளிநாட்டவர்கள் கையகப்படுத்துவதற்குரிய சூட்சியாகும்.

எனவேபாராளுமன்றத்திலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் காணிதிருத்தச் சட்டம் தொடர்பாக நல்லவிடயம், எதுகெட்டவிடயம் எது என ஆராய்ந்து ஒருமுடிவு எட்டியபின் ஒருதீர்மானத்தை எட்டவேண்டும். அப்படி இல்லாமல் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் கிழக்குமாகாணத்திலுள்ள வளமானகாணிகள் அனைத்தும் வெளிநாட்டவர்களின் கையில் சென்றுவிடும்.

நாற்பதுவருடங்கள் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்துயுத்தத்தால் பாதிக்கப்பட்டதமிழ் மக்கள் எமதுவளங்களை முதலீடு செய்வதற்கு குறிப்பிட்டகாலம் தேவையாக உள்ளநிலையில் மிகவும் விரைவாக எமது மாவட்டத்திலுள்ள வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கு எமதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள். எமதுவளங்களைநாங்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இச் சட்டதிருத்தத்திற்குஎமதுமக்கள் பிரதிநிதிகள் சார்பாகவாக்களிக்கும்; பட்சத்;தில் எமதுபிரதேசத்திலுள்ளவளங்கள் அனைத்தும் அந்நியர்களால் நிருவகிக்கப்படுவதோடு,நாங்கள் அந்நியர்களின் கைகளில் தொங்கிநிற்கவேண்டிய சூழ்நிலைஏற்படும்.

நாற்பதுவருடஆயுதப் போராட்டத்தின் வடுக்களிலிருந்து இன்னும் மாறாமல் இருக்கின்றநிலையில் எம்மவர்களுக்குபொருளாதாரஅபிவிருத்திதொடர்பாகசெயல்வடிவம் கொடுப்பதற்கு,திட்டங்களைஅமுலாக்குவதற்கு,தொழில் வாய்பைஏற்படுத்துவதற்குசிறிதுகாலம் தேவையாகஉள்ளது. எம்மைநாம் பலப்படுத்துவதற்குமுன்பேஅந்நியர்கள் எமதுவளங்களை சூரையாடுவதற்கானஒருசதிமுயற்சியாகவேகருதவேண்டிஉள்ளது. பொருளாதாரஊக்குவிப்பு,தொழில்வாய்ப்பு,முதலீட்டுஊக்குவப்பு,என்னும் போர்வையில் எமதுவளங்களைஅந்நியர்கள் கையாளுவதற்குநாங்கள் அனுமதிக்கக் கூடாது.

குறிப்;பாக. மட்டக்களப்புமாவட்டத்திலுள்ளஅண்ணளவாக ஆறு இலட்சத்திற்குமேற்பட்டகாணிகளில் வனவளத்திணைக்களம்,வனவிலங்குத் திணைக்களம்,மகாவலிஅதிகாரசபை,குடியிருப்புக் காணிகள்,கரையோரத் திணைக்களத்திற்குரியகாணிகள்,குளம்,வாவிகளுக்குரியகாணிகள்,விவசாயத்திற்குரியகாணிகள் உள்ளன.

இக்காணிகளில் இரண்டுஇலட்சத்திஐம்பதாயிரத்திற்குமேற்பட்டகாணிகளைகாடுபேணல் கட்டளைச் சட்டம் (வனஇலாகா),மத்தியகடல்தொழில் மற்றும் நீரியல்வளங்கள்அபிவிருத்திஅமைச்சு,மத்தியவலுமீள் புதுப்பித்தல் வலுஅமைச்சு இம் மூன்றுஅமைச்சுக்களும் சேர்ந்து 2013ம் ஆண்டுதொடக்கம் 2017ம் ஆண்டு இறுதிவரையும் வர்த்தமானிபிரகடனப்படுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கதாகும். ஏனைய காணிகளான மூன்று இலட்சம் காணிகள் குடியிருப்பு,விவசாயம்,போன்றவற்றிற்கும், ஏனைய எழுபத்தையாயிரத்திற்குமேற்பட்டகாணிகள் வாவி,குளம்,நீர்நிலைகள்,கரையோரத் திணைக்களம்,மகாவலிக்குரியகாணிகளாகும்.

இந்தநிலையில் இம்மாவட்டத்தில் காணிகளைமத்தியஅரசாங்கம் அரைவாசிக்குமேற்பட்டகாணிகளைதன்வசம் கையகப்படுத்தியநிலையில் பொருளாதாரமுதலீடுஎன்னும் போர்வையில் வளமானகாணிகளைஎமதுகையிலிருந்துபிடுங்கிஎடுப்பதற்கானஒருதிட்டமாகவேபார்க்கவேண்டிஉள்ளது.

இவைமட்டுமின்றிமணல்அகழ்வு,காடுஅழிப்பு,மதுபானசாலைதிறப்பு,தண்டப்பணம் அறவீடு,உல்லாசத்துறைக்குரியகாணிகள் அபகரிப்பு,கதிரவெளியில் வளமானகாணிகொள்முதல்,கடல்பகுதியில் அனுமதியற்றமீன்பிடிபோன்றவளங்கள் அனைத்தும் சூரையாடப்படுகின்றநிலையில் அந்நியர்களும் எமதுவளமானகாணிகளைவாங்கும் பட்சத்தில் எமதுபொருளாதாரத்தை இன்னொருவர் கையில் தொங்கிநிற்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.வடகிழக்கில் யுத்தம் காரணமாகவளங்களைஅந்நியர்கள் கையகப்படுத்துவதற்கானவாய்ப்புக்கள் அழக்கப்படவில்லை. பாதுகாக்கப்பட்டன.தென்இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்துவளங்களையும் குறிப்பிட்டநபர்கள் கையகப்படுத்திவிட்டுவெளிநாட்டவர்களும்,தென்இலங்கையைச் சேர்ந்தவர்களும் எமதுபிரதேசத்திலுள்ளவளங்களைகையகப்படுத்தமுதற் கட்டமானநடவடிக்கை இதுவாகும்.

எனவேதமிழர்களைபலவீனமாக்குவதற்குமேற்கொள்;ளப்படும் காணிசீர்திருத்தச் சட்டத்தில் தேவையற்றவற்றைநிராகரிக்கவும்,எதிர்த்துவாக்களிக்;கவும் முன் வருமாறுஅறைகூவல் விடுக்கின்றேன்.