பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு

((படுவான் பாலகன்)) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு இன்று(04) ஞாயிற்றுக்கிழமை முனைக்காடு உக்டா சமுகவள நிலையத்தில் இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச பல்கலைக்கழக சமுகமேம்பாட்டு ஒன்றியத்தின் அனுசரணையில் நடைபெற்றது. இதில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.கருணாகரன் வளவாளராக கலந்துகொண்டார்.

பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகத்திற்கு செல்வதுமட்டுமல்லாது, எதிர்காலத்தில் இருக்ககூடிய தொழில் போட்டி, அத்தொழில்போட்டிக்கு ஏற்றவகையில் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, பல்கலைக்கழகத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் எனப் பலவிடயங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

அதேவேளை தொழில் விருப்பு, திட்டமிடல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் குழுச்செயற்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.