திருமலை வைத்தியசாலையில் தரமற்ற மருந்துகள் விநியோகம்

கதிரவன் திருகோணமலை
பொது வைத்தியவசாலைக்கு சுகாதார அமைச்சராலும், சுகாதார திணைக்களத்தாலும் வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையும், காலாவதி காலம் குறைந்ததுமாகும். இதனால் தரமானசேவைகளை எம்மால் நோயாளர்களுக்கு வழங்க முடியாது உள்ளது. இவ்வாறு அரச மருத்துவர்கள் சங்கத்தின் திருகோணமலை கிளையின் தலைவர் மருத்துவர் கயான் செனவிரத்ன தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை 2019.08.02 திருகோணமலை பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அங்கு மருத்துவர் கயர் செனவிரத்த தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கௌரவ சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளால் மருத்துவதுறைக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. நாம் பல தொழிற்சங்க போராட்டங்களை நடத்திய போது எம்மை அச்சுறுத்தும் செயற்பாகள் அவரது அமைச்சால் மேற்கொள்ளப்பட்டள்ளது. சுகாதார அமைச்சால் கொள்வனவு செய்து வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவை என பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக நாம் பதாதைகளை பொது மருத்துவமனைக்கு முன்னால் தொங்க விட்டிருந்தோம். இதனை ஒரு குழுவினர் பலாத்காரமாக அகற்றச் செ;றிருந்தர். இது விடயமாக நாம் nhலிசாரிடம் முறையிட்டோம். அதற்கு அவர்கள் சுகாதார அமைச்சு செயலாளரது வாகனத்தில் வந்தவர்களே இதனை அகற்றிச் சென்றவர்கள் எனத் தெரிவித்தனர்.
நோயாளர்களோடு நாம் விளையாட முடியாது. அபாயகரமான நோய்களுக்கான மருந்துகள் தரமானவையாக இருக்க வேண்டும் மேலும் மருத்துவ மனைகளுக்கு போதுமான அளவு மருந்துகளும் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.