அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக தகுதி வாய்ந்த கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவையின் தரம் வாய்ந்த அதிகாரிகள்  விண்ணப்பிக்கலாம் என, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு, அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்பிற்கான நியமனங்களை வழங்குவது தொடர்பான  நேர்முகப் பரீட்சையும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.