மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் செவ்வாய்கிழமை (30)  பிற்பகல் 3 மணிக்கு கன்னங்குடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஏறாவூர் பற்று, மண்முனை தென் மேற்கு, மண்முனை மேற்கு கோட்டம் ஆகிய 3 கோட்டங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மண்முனை தென் மேற்கு கோட்டம் கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி, முத்துபண்டா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

இன்றைய இவ் வலயமட்ட விளையாட்டு நிகழ்வின்போது இவ் வலயத்தில் சாதனை படைத்த மா ணவர்களும், விளையாட்டு ஆசிரியர்களும் இதன்போது அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.