இரண்டாம் தவணை பாடசாலை நாளை மறுதினம் நிறைவு

இந்த வருடத்தின் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் இரண்டாவது பாடசாலைத் தவணை நாளை மறுதினம் நிறைவுபெறவுள்ளது.

மூன்றாவது பாடசாலைத் தவணை செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகும். ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையின் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அதற்கான அனுமதிப் பத்திரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தர மற்றும் சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்நாட்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் நடவடிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிற்றிய தெரிவித்துள்ளார்.