மட்டக்களப்பில் பிரதேசசபை கோரி உண்ணாவிரதப்போராட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 2002 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கான பிரதேச சபை இன்று வரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டடை முன்வைத்து வாழைச்சேனையில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை அஷ்ரப் நற்பனி மன்ற பிரதிநிதிகள் நடாத்தி வருகின்றனர்.

வாழைச்சேனை அஷ்ரப் நற்பனி மன்ற தலைவர் ஏ.எம்.ஹ_ஸைன் தலைமையில் இடம் பெரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம் பெருகின்றது.

எங்களுக்கான பிரதேச சபையை வழங்குவதற்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெற்றுத்தருவதாக காலம் காலமாக ஏமாற்றி வருவதாகவும் எங்களுக்கான சபை கிடைப்பதற்கு சகல தரப்பினரும் முயற்சி செய்து பெற்றுத்தர வேண்டும் என்று சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தன