கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாஅது.கருணா கேள்வி.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாதென முன்னாள்
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இராணுவத் தளபதி பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க முடியாது என அவர் கேட்டுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவுடன் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.