கல்முனை வேறு. கல்முனைக்குடி வேறு.!

கல்முனை வேறு. கல்முனைக்குடி வேறு.!
கிழக்குத் தமிழர்கூட்மைப்புத்தலைவர் த. கோபாலகிருஸ்ணன் கூறுகிறார்.
(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை என்பதும் கல்முனைக்குடி என்பதும் இரு வேறு தனித்தனிக்
கிராமங்களாகும். அப்போது கல்முனை என்பது தனித்தமிழ்க் கிராமமாகும்.
கல்முனைக்கடி 90 வீதத்திற்குமேல் முஸ்லீம்களைக் கொண்ட முஸ்லீம்
பெரும்பான்மைக் கிராமமாகும்.எனவே இரண்டையும் இணைத்து கல்முனைக்கு
வேறுஅர்த்தம் பிறப்பிக்க யாரும் முற்படக்கூடாது.

என்று கிழக்குத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் தம்பியப்பா
கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

கல்முனையில் ஆலயவீதி பள்ளிவாசல்வீதியாக மாற்றம்செய்யப்படவுள்ளமை
தொடர்பில்  எழுந்துள்ள மற்றுமொரு சர்ச்சையையிட்டு அவர் கருத்துக்கள்
வெளியிட்டார்.

ஒரு வீதிக்கு பெயர்மாற்றம் செய்வதென்பது பலநடைமுறைகளுக்கு பிற்பாடுதான்
நடைபெறவேண்டுமென்பதை படித்தவர்கள் அறிவார்கள். உண்மை அப்படியிருக்க
கல்முனை விவகாரம் தினமும் தேசியரீதியில் பேசப்பட்டுக்கொண்டுவரும்
சமகாலத்தில் இவ்வாறானதொரு கீழ்த்தரமான நரித்தனமான வேலையை
ஒருஉள்ளுர்அரசியல்வாதி செய்யமுற்படுவதை கல்முனை மாநகரசபை மேயர்
அனுமதிக்கின்றாரா? அல்லது அவர்களது தலைவர்கள் அங்கீகரிக்கின்றனரா?

இனவாதத்தைப்பரப்புவோரை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை
எடுப்பதாகக்கூறுகிறது.முதலில் இனமுறுகலை தோற்றுவிக்கமுனையும்
இப்படிப்பட்ட குறுகியநோக்கம்கொண்ட அரசியல்வாதிகளை முதலில்
கைதுசெய்யவேண்டும். என்றும் அவர் கூறுகின்றார்.

அவர் மேலும் கூறுகையில்:
கல்முனையின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியும்
வடக்கு எல்லை தாளவெட்டுவான் வீதியும் ஆகும். அதாவது கல்முனையின்
தென்எல்லை கல்முனைக்குடியும் வடஎல்லை பாண்டிருப்பு கிராமமுமாகும்.
அதேபோல் கல்முனைக்குடியின் தெற்கு எல்லை கல்முனை ஸாகிராக் கல்லூரி
வீதியும் வடக்கு எல்லை கல்முனைத்தரவைப் பிள்ளையார் கோயில் வீதியுமாகும்.
அதாவது கல்முனைக்குடியின் தென்எல்லை சாய்ந்தமருது கிராமமும் வட எல்லை
கல்முனையும் ஆகும்.
கல்முனையையும், கல்முனைக்குடியையும் பிரிக்கும் எல்லையாகச் சுமார் 400
வருடங்கள் பழைமை வாய்ந்த கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில்வீதி
விளங்கிற்று, மேலும் கொழும்பு – இரட்மலான-வெல்லவாய – மட்டக்களப்பு
((C.R.W.B Road ) ) வீதியில் கல்முனை ஊர் ஆரம்பிப்பதைக் குறிக்கும்
‘கல்முனை’ பெயர்ப்பலகை பொதுமராமத்து இலாகாவினால்; (Public works
Department) பிரதான வீதியில் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயிலுக்கு
முன்னால்தான் நிர்மாணிக்கப் பெற்றிருந்தது.

கல்முனைக்குடியைக் கல்முனையோடு பிணைத்து 1897இல் கல்முனை என்ற பெயரில்
‘சனிற்றறி’ சபை (ளுயnவையசல டீழயசன) நிறுவப்பட்டது என்பதினாலோ அல்லது
பின்னாளில் இது 1946ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க பட்டினசபைகள்; சட்டத்தின்
கீழ் 1947 இல் கல்முனை என்ற அதே பெயரில் பட்டினசபை (Town Council)
ஆக்கப்பட்டது என்பதினாலோ இரு வேறு தனித்தனிக் கிராமங்களான கல்முனையும்,
கல்முனைக்குடியும் ஒரே தனிக்கிராமமாகி விடமுடியாது.

கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தில்
முஸ்லீம் தரப்பினர் கல்முனை என்பது தெற்கே கல்முனை ஸாகிராக்
கல்லூரியிலிருந்து ஆரம்பித்து வடக்கே தாளவெட்டுவான் வரையும் உள்ளதாகச்
சித்தரித்து அதனையே தங்களது பூர்வீகம் எனச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

அதற்குச் சார்பாக அவர்கள் முன்வைப்பது 1892ஆம் ஆண்டின் 18ம் இலக்கக்
கட்டளைச்சட்டத்தின் கீழ் 1897ஆம் ஆண்டின் 5459 இலக்கமுடைய ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பெற்ற அரசவர்த்தமானி அறிவித்தல் மூலம்
பிரகடனப்படுத்தப்பெற்ற அப்போதைய கல்முனை ‘சனிற்றறி’ சபை ((Sanitary
Board) யின் எல்லைகளையேயாகும். இது நன்கு திட்டமிட்டுச் சோடிக்கப்பட்ட
தவறான வாதம் ஆகும்.

தற்போதுள்ள கல்முனைத் தேர்தல் தொகுதி, கல்முனை மாநகரசபை, கல்முனை
(பிரதான) பிரதேச செயலகம் என்பன சாய்ந்த மருது , கல்முனைக்குடி, கல்முனை
பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை,
சேனைக்குடியிருப்பு ஆகிய தனித்தனிக்கிராமங்களை உள்ளடக்கியுள்ளவை .

கல்முனை என்ற பெயரில் தேர்தல் தொகுதியும், கல்முனை என்ற பெயரில் மாநகர
சபையும், கல்முனை என்ற பெயரில் பிரதேச செயலகமும் அமைந்துள்ள காரணத்தால்
முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும், முழுக்கல்முனை மாநகரசபைப்
பிரதேசமும், முழுக்கல்முனைப் பிரதேசசெயலக பிரிவுப் பிரதேசமும் கல்முனை
என்னும் பெயரில் ஒரு தனிக்கிராமம் ஆகிவிடமுடியாது.

அதுபோலவே 1897ல் கல்முனையும், கல்முனைக்குடியும் இணைந்த ‘சனிற்றறி’ சபை
((Sanitary Board) கல்முனை என்ற பெயரில் அமைந்த காரணத்தாலும் 1947இல்
கல்முனையும், கல்முனைக்குடியும் இணைந்து கல்முனை என்றபெயரில்
பட்டினசபையாக அமைந்த காரணத்தாலும் முழுச் ‘சனிற்றறி’ சபைப் பிரதேசமும்,
முழுப்பட்டினசபைப் பிரதேசமும் கல்முனை என்னும் பெயரில் ஒரு
தனிக்கிராமமாகி விடமுடியாது என்பதை முஸ்லிம் தரப்பினர் புரிந்து கொள்ள
வேண்டும்.

அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு மாவட்டமானது நிருவாகத்
தேவைகளுக்காக ‘வன்னிமை’ களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அப்போதைய நிர்வாக
அலகான வன்னிமையைத் தற்போதுள்ள பிரதேச செயலகப்பிரிவுடன் ஒப்பிடலாம்;.
ஒவ்வொரு வன்னிமையும் ‘உடையார் பிரிவு’ எனும் துணைப் பிரதேசங்களாகப்
பிரிக்கப்பட்டிருந்தன. உடையார் பிரிவுகள் மேலும் பொலிஸ்
துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இப் பொலிஸ் துணைப்பிரிவுகள்
‘குறிச்சிகள்;’ என ((Village  Headman’s Division) அழைக்கப்பட்டன.

கல்முனை ஒருதனியான உடையார் பிரிவாக இருந்தது. அது கல்முனை 1ஆம்
குறிச்சி, 2ஆம் குறிச்சி, 3ஆம் குறிச்சி என மூன்று குறிச்சிகளைக்
கொண்டிருந்தது. அதேபோல் கல்முனையின் அயல் கிராமமான கல்முனைக்குடி
கல்முனைக்குடி 01ஆம் குறிச்சி, 02ஆம் குறிச்சி, 03ஆம் குறிச்சி, 04ஆம்
குறிச்சி, 05ஆம் குறிச்சி என ஐந்து குறிச்சிகளைக் கொண்டிருந்தது.

தனித்தனிக்கிராமங்களாக விளங்கிய கல்முனையின் மூன்று குறிச்சிகளையும்
கல்முனைக்குடியின் ஐந்து குறிச்சிகளையும் சேர்த்துத்தான் தமிழர்களைச்
சிறுபான்மையினராக்கும் திட்டத்துடன் புதிதாக 1947இல் உருவான
‘கல்முனைப்பட்டினசபை’யானது இரண்டு வட்டாரங்கள் தமிழ்ப்
பெரும்பான்மையாகவும் ஐந்து வட்டாரங்கள்; முஸ்லீம் பெரும்பான்மையாகவும்
வருமாறு மொத்தம் 07 வட்டாரங்களுடன் உருவாக்கப்பட்டது. முன்பு
கல்முனைக்குடியானது கல்முனையுடன் சேர்ந்ததாக இருந்ததென்றால்
கல்முனைக்குடியின் ஐந்து குறிச்சிகளும் கல்முனையின் மூன்று
குறிச்சிகளுடன் தொடராக வருமாறு கல்முனை 4ஆம்; குறிச்சி, கல்முனை 5ஆம்
குறிச்சி,  கல்முனை 6ஆம் குறிச்சி, கல்முனை 7ஆம் குறிச்சி, கல்முனை 8ஆம்
குறிச்சி என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.

அவ்வாறு அமையவில்லை என்பதே கல்முனையும் கல்முனைக்குடியும் இரு வேறு
தனித்தனிக்கிராமங்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
கல்முனைக்குடி 1ஆம் குறிச்சி, கல்முனைக்குடி 2ஆம் குறிச்சி,
கல்முனைக்குடி 3ஆம் குறிச்சி, கல்முனைக்குடி 4ஆம் குறிச்சி,
கல்முனைக்குடி 5ஆம் குறிச்சி என்றே இருந்தது.

உண்மைகள் இப்படியிருக்கும்போது முஸ்லீம் தரப்பினர் கல்முனைக்குடியைக்
கல்முனையுடன் பிணைத்துத் தெற்கே கல்முனை ஸாகிராக்கல்லூரியிலிருந்து
வடக்கே தாளவெட்டுவான் வரையிலுள்ள பிரதேசத்தைக் கல்முனை எனச்
சித்தரித்துக் காட்டுவது கல்முனைத் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பும்
எதிர்காலத்தில் கல்முனைத் தமிழர்களின் இருப்பைக்
கேள்விக்குட்படுத்தலுமாகும்  என்பதைத் தமிழர் தரப்பினரும் விடயத்திற்கான
அமைச்சரும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும்
புரிந்துகொள்ள வேண்டும்.
1897இல் நிறுவப்பட்ட கல்முனைச் ‘‘Sanitary Board’  இனதும் 1947இல்
உருவாக்கப்பெற்ற கல்முனைப் பட்டடினசபையினதும் வடக்கு எல்லையான
தாளவெட்டுவான் வீதியைக் கல்முனைக்குடியின் வடக்கு எல்லையாகச்
சித்தரிப்பது திட்டமிட்ட ‘சதி’ ஆகும். கல்முனைக்குடியின் வடக்கு எல்லை
உண்மையில் கல்முனைத்தரவைப்பிள்ளையார் கோயில் வீதியே ஆகும்.
கல்முனை ‘‘Sanitary Board’  மற்றும் கல்முனைப் பட்டினசபை என்கின்ற
சொற்பதங்களால் சுட்டப்படும் நிலப்பரப்பும் கல்முனை என்ற சொற்பதத்தால்
சுட்டப்படும் கல்முனைக் கிராமத்தின் நிலப்பரப்பும் ஒன்றல்ல. கல்முனைக்
கிராமம் என்பது கல்முனை ‘‘Sanitary Board’ மற்றும் கல்முனைப்
பட்டினசபையிலிருந்து கல்முனைக்குடிக் கிராமம் நீங்கிய நிலப்பரப்பாகும்.
எனவே கல்முனை என்பது தரவைப்பிள்ளையார் கோயில் வீதிக்கும் தாளவெட்டுவான்
வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசமே என்பது வெள்ளிடைமலை.
எனவே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும்
விவகாரத்திற்கான தீர்வு என்று வரும்போது கல்முனை தெற்குப் பிரதேச செயலகப்
பிரிவுடன் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை முஸ்லீம்பிரிவு ஆகியவற்றை
நிலத்தொடர்பற்ற  வகையில் இணைத்துக் கொள்ளும் விடயத்திலும் அல்லது
தற்போதுள்ள பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவுகளையும் மருதமுனைக்கிராமத்தையும்
இணைத்து  மருதமுனைக்கென தனியானதொரு பிரதேச செயலகப்பிரிவை ஏற்படுத்தும்
விடயத்திலும் மட்டுமே தமிழர் தரப்பு நெகிழ்வுத்தன்மையுடன் சமரசத்திற்குச்
செல்லலாமேதவிர 1989ம் ஆண்டு கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தின்
ஆளுகையின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வமாக
அறிவிக்கப்பட்ட கல்முனை 01, கல்முனை 02, கல்முனை 03, பாண்டிருப்பு 01,
பாண்டிருப்பு 02, பெரியநீலாவணை 01, பெரியநீலாவணை 02,  நற்பிட்டிமுனை 01,
நற்பிட்டிமுனை 02, சேனைக்குடியிருப்பு ஆகிய அப்போதைய பத்துக் கிராம
சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசத்தையே தரமுயர்த்த வேண்டுமென்ற
விடயத்தில் தமிழ்த்தரப்பிடம் எந்த நெகிழ்விற்கும் சமரசத்திற்கும்,
கிஞ்சித்தும் இடமில்லை; இடமிருக்கக் கூடாது.
தமிழர்தரப்பைப் பொறுத்தவரையில் கல்முனையையும் கல்முனைக்குடியையும்
பிரிக்கும் பூர்வீக எல்லையாக விளங்கிய கல்முனைத்தரவைப் பிள்ளையார் கோயில்
வீதிக்கு இப்பால் அதாவது வடக்கே ஒரு அங்குலமாவது விட்டுக் கொடுப்பது
தற்கொலைக்குச் சமமாகும். அதாவது கல்முனைத்தரவைப் பிள்ளையார் கோயில்
வீதிக்கும் வடக்கே உள்ள தாளவெட்டுவான் வீதிக்கும் இடையிலே அமைந்தும்
கல்முனையின் 1ஆம், 2ஆம், 3ஆம் குறிச்சிகளில் அடங்கியுமிருந்த
பிரதேசத்தின் ஒரு சிறு துண்டினையாவது விட்டுக்கொடுக்கத் தமிழ்த்
தரப்பினர் இடமளிக்கக் கூடாது