தாந்தாமலை தமிழ் கடவுளுக்கு நாளை கொடியேற்றம்

(படுவான் பாலகன்)  கிழக்கு மாகாணத்தில் சிறப்புற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவமானது நாளை(25.07.2019) காலை எட்டு மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும்  15.08.2019 ஆம் திகதி திருவோண நட்சத்திரத்தில் காலை 6 மணிக்கு தீர்த்த உற்சவமும் இடம்பெற்ற வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.

உற்சவ காலங்களில் விசேட பூஜை ஆராதனைகளும் திருவிழாக்களும் கலை நிகழ்வுகளும் கதா பிரசங்கங்களும் நடைபெற உள்ளன.