தபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான் உட்பட்ட பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று திங்கட்கிழமை மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக தங்களது தபால் நிலையம் மூலமாக மேற்கொள்ளும் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.