அரசடித்தீவில் நடமாடும் சேவை – மனோ கணேசன் பங்கேற்பு

தேசிய  ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை(21) அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது 1257 பேர் தமது சேவைகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

பிறப்புச் சான்றிதழை சட்டரீதியாக மொழிபெயர்த்துக் கொடுத்தல், பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை அடையாளங்கண்டு அவற்றைத் திருத்தி கொடுத்தல் , பிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல், விவாதம் செய்யாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல், பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குதல் ,தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அரச காணி தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு, கமநல சேவை தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு, ஊழியர் சேமலாப நிதி தொகை விசாரணைகள்,  கடன் வசதி பெற்றுக்கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு,  சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவசமாக சட்ட உதவி,   சிறைச்சாலை கைதிகள் தொடர்பான பிரச்சினைக்கு உதவி,  அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை அதற்கான தீர்வு ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.