வாழைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் சென்ற செயலாளருக்கு கௌரவம்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் இடமாற்றம் பெற்று மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கு சென்றதை முன்னிட்டு சேவை நலன் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வும் இன்று நடைபெற்றது.

கறுவாக்கேணி சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளி அமைப்பு, பிரதேச முதியோர் சங்கங்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழு என்பன இணைந்து குறித்த கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் சமூகசேவை உத்தியோகத்தர்களான திருமதி.சிரானி சிவநாயகம், எஸ்.nஐயசேகர், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், திருமதி.எஸ்.சந்திரகுமார், மாற்றுத்திறனாளி அமைப்பின் பிரதிநிதிகள், முதியோர் சங்கப் பிரதிநிதிகள், கறுவாக்கேணி சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றம் பெண்கள் அலகு உத்தியோகத்தர்கள், கறுவாக்கேணி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்றரை வருடங்களாக வன்னியசிங்கம் வாசுதேவன் ஆற்றிய பணிகள் தொடர்பில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சிலாகித்துப் பேசப்பட்டதுடன், அவர் ஆற்றிய பணிகள் நலிவுற்ற மக்களின் நலன்கள் சார்ந்தே இருந்துள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு பெற்றுத் தந்ததை கிராம மட்ட தலைவர்கள் நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.