தேசிய மாணவர் படையணி

தேசிய மாணவர் படையணிக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு வழியனுப்பும் நிகழ்வு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியை பெற்றுக் கொள்வதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து 26 மாணவர்களும், கதிரவெளி விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து 24 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு ரந்தெனிகல செல்லவுள்ளார்கள்.

இம்மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.