சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(ஆதவன்)