மட்டக்களப்பில் நோயாளிகளுக்கு பழுதடைந்தபாண்கள் கண்டுபிடித்த சுகாதாரப்பரிசோதகர்.

மனித நுகர்வுக்கு உதவாத  பழுதடைந்த பாண்களை வைத்தியசாலை நோயாளிகளுக்கு விநியோகிக்கவிருந்த குற்றத்திற்காக  பத்தாயிரம் ரூபாய் அபராதம் களுவாஞ்சிகுடி  நீதிவானால்  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

பெரியகல்லாறு வைத்தியசாலையின் நோயாளிகளின் உணவு விநியோகத்திற்கு பொறுப்பான நபர் பழுதடைந்த பாணினை காலை உணவுக்காக நோயாளிகளுக்கு விநியோகிக்க தயாராக இருந்த நிலையில் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சோதனை நடவடிக்கையை பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார பரிசோதகர் மேற்கொண்டுள்ளார் இதன்போதே குறித்த  பவனைக்கு உதவாத பாண்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி விநியோகத்தருக்கு எதிராக சுகாதார பரிசோதகரினால் வழக்கு தொடரப்பட்டதுடன் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாண்களும் நிதிமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த அபராதம் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நிதவானால் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.