சிங்கள, தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேரை திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாற்றியுள்ளனர்..

 

கடந்த 10 வருட காலப் பகுதியில் மாத்திரம் சிங்கள, தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேரை திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்துக்கு திருப்பியுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அடுத்து வரும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணையொன்றை நடாத்தி, விரும்பியவர்களுக்கு தான் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.

பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் முடிக்க முடியாது என்ற சட்டம் நாட்டில் அமுலில் இருந்தும், முதுகெலும்பு இல்லாத அரசாங்கத்துக்கு பயங்கரவாதி சஹ்ரான் பாடசாலை செல்லும் 8 ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த போது தடுக்க முடியவில்லை.

புதிய அரசாங்கத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளை மணம் முடிக்கத் தடை செய்யும் விதத்தில் கடுமையான சட்டமொன்றையும் கொண்டுவரப் போவதாகவும் தேரர் மேலும் கூறினார்.

இன்று (05) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டார்.