நடுக்காட்டுக்குள் நாவலடியில் ஜீவசேவையாற்றும் மருத்துவமுகாம்.

காரைதீவு  நிருபர் சகா

வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கான நடுக்காட்டிற்குள் நாவலடியில் நடாத்தப்பட்டுவரும் இலவச மருத்துவ முகாம் இவ்வருடமும் தமது சேவையை  (01)ஆரம்பித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்தின் மேலதிக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி.டாக்டர் அழகையா லதாகரன் இச்சேவையை தனது சக வைத்தியர்களுடன் இணைந்து கடந்த பலவருடங்களாகச்செய்துவருகிறார்.

நடுக்காட்டிற்குள் தங்களது உயிரைத்துச்சமென மதித்து ஏனைய உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வைத்தியர்கள் பலத்த இன்னல்களுக்கும் வசதியீனங்களுக்கும் மத்தியில் மேற்கொண்டுவரும் இவ்வைத்தியசேவை மிகவும் பெறுமதியானது.பாராட்டுக்குரியது.

டாக்டர் லதாகரனோடு பெரும்பான்மையின வைத்தியர்களும் இணைந்து இச்சேவையை நடாத்திவருகின்றனர்.

நடுக்காட்டிற்குள் வைத்து அடியார்களுக்கு ஏதாவது சுகயீனம் ஏற்படும்பட்சத்தில் இம்முகாம் ஒருவரப்பிரசாதமாகும்.