முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு 3 வருடகால சிறைத்தண்டனை

கிராம பாதுகாப்பு ஊழியரை தமது வீட்டில் சேவையில் ஈடுபடுத்தியதான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு 3 வருடகால சிறைதண்டனையை கொழும்பு பிரதான நீதவான் திருமதி லங்கா ஜெயரத்ன இன்று விதித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தினால் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு 3 லட்ச ரூபா தண்ட பணம் விதிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டில் மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய போது மினிவங்கொட பிரதேசத்தில் உள்ள இவரது சொந்த வீட்டில் வீட்டு பணிக்காக கிராம பாதுகாப்பு ஊழியரை ஈடுப்படுத்தியதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக லஞ்சம் அல்லது ஊழலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீண்ட கால விசாரணைக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைவாக இந்த 6 குற்றச்சாட்டுக்கு தனித்தனியாக தலா 1 வருட வீதம் தளர்த்தப்பட்ட சிறை தண்டணை விதிக்கப்பட்டது. இந்த சிறைத்தண்டனை 3 வருட காலத்துக்கு உட்பட்டதாக இருக்குமென அவர் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பை அறிவித்த நீதவான் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் மற்றும் ஏனைய அரச அதிகாரிக்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

15 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் 6 குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த போது ஏனைய குற்றச்சாட்டுக்களின் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று நீதவான் குறிப்பிட்டுள்ளார்.