திருமலை இந்துக்கல்லூரி மாணவர்களும் பெற்றார்களும் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை. பாடசாலைசமுகம் எச்சரிக்கை.

மூதூர்நிருபர்
திருகோணமலையில் முன்னணி தேசியபாடசாலையான ஸ்ரீ கோணேஸ்வரா இ.கிச.இந்துக்கல்லூரியில் நிலவும் ஆளணி வளப்பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாத விடத்து பெற்றாரும் பிள்ளைகளும் வீதிக்கிறங்கும் துர்பாக்கிய நிலமை ஏற்படும் என பெற்றார் முறையிட்டுள்ளனர்.
என்று கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தி.பிரபாகன் தெரிவித்தார். கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் 82வது வருடாந்த தின நிகழ்வில் விளக்கவுரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்
கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர்மேலும் குறிப்பிடுகையில், தேசிய ரீதியில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் 114 ஆசிரியகள்தேவை உள்ளது. இவற்றில் 30பேருக்கான வெற்றிடம் நீண்டகாலமாக நிரப்பாமல் உள்ளமை கவலை தருகிறது..
இதன்காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளியை தற்போதுள்ள அதிபர் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பெரும் சிரமத்தின் மத்தியில் ஈடு செய்து வருகின்றனர்.எமது கல்லூரி இந்த மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைதேடி தரும் கல்லூரியாகவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சு.வலயகல்வித்திணைக்களங்கள்,மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக மத்திய கல்வி அமைச்சின் கல்வி கண்காணிப்பு நடவடிக்கைக்க பொறுப்பாக வுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுரூப் போன்ற வர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். அவர்கள் ஜூலை மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். அதற்குள் குறித்த இடைவெளியை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியழித்துள்ளனர்.

குறித்த காலத்தில்குள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு எற்படாத விடத்து பெற்றாரின் தீர்மானத்தை யே கைக்கொள்ளவேண்டி ஏற்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இங்கு இத்தினத்தைமுன்நிட்டு நடாத்தப்பட்ட கிறிக்கற்சுற்றுப்போட்டி,உதைபந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரியின் பழைய மாணவர்களான தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார்,யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவிரையாளர் கலாநிதி சக்திபரன், திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ச.பரமேஸ்வரன் போன்றோர் இவ்வாண்டுக்கான விருந்தினர்களாக தெரிவு செய்யப்பட்டு பழைய மாணவர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு முன்னாள் அதிபரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி உட்பட பல பழைய மாணவர்களும் ஓய்வு நிலை அதிபர்கள் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்
கல்லூரியின் கனடா பழைய மாணவர்கிளையின் உறுப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்றவர்களையும் விருந்தினர்களையும் கௌரவித்தனர்