அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு

அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான  சம்­பள அதி­க­ரிப்பு உள்­ளிட்ட சம்­பளம் மற்றும்  மேல­திக  கொடுப்­ப­ன­வு­களின் அதி­க­ரிப்பு இன்று திங்கட்கிழமை முதல் நடை­மு­றைப்படுத்­தப்­ப­டவுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 

அதற்­க­மை­வாக 11 இலட்சம் வரை­யி­லான அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால கொடுப்­ப­ன­வாக  2500 ரூபா, பாது­காப்பு பிரி­வுக்­கான மேல­திக  கொடுப்­ப­னவு, ஓய்­வூ­திய கொடுப்­ப­னவில் காணப்­படும்  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணல் மற்றும்  விசேட  தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்­கான  மேல­திக கொடுப்­ப­ன­வு­களை  அதி­க­ரித்தல்  போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­வென அர­சாங்கம் 40 ஆயிரம் மில்­லியன் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்துள்­ளது.

அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால  கொடுப்­ப­னவு  2500 ரூபா வழங்கப்பட­வுள்­ளது. எனினும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு  வழங்­கப்­பட்ட வாழ்க்கை செல­வுக்­கான கொடுப்­ப­னவில்  எவ்­வித  மாற்றமும்  ஏற்­ப­ட­வில்லை. வாழ்க்கைச் செல­வுக்­காக வழங்­கப்­பட்டு வந்த  7,800 ரூபாவை   அவ்­வாறே பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 2019 வர­வு­–செ­ல­வுத்­திட்ட யோச­னை­களில் முப்­படை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தாக நிதி அமைச்சர் ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக அதி­கா­ரி­க­ளுக்­கென வழங்­கப்­படும் மாதாந்த கொடுப்­ப­னவை 2019 ஜன­வ­ரி­மாதம் முதல் அமு­லுக்கு வரும் வகையில் 23,231  ரூபா வரையும் ஏனைய பதவி தரத்­தி­லானவர்களுக்கு மாதாந்த கொடுப்­ப­னவு 19,350 வரையும்  அதி­க­ரிக்­கப்­ப­ட்டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக இன்­று­முதல்  முப்­ப­டை­களை சேர்ந்­த­வர்­க­ளுக்­காக  வழங்­கப்­பட்டு  வந்த  வீட்டு கூலிக்­கான  கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோன்று  முப்படையினருக்குமான  கொமாண்டோ கொடுப்பனவு   இன்று முதல் 5000 ரூபாவரை அதிகரிக் கப்படவுள்ளது. இதற்கென  அரச நிதியிலிருந்து  1175 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.