மட்டக்களப்பு, அம்பாறை ,பொலன்னறுவை மாவட்டங்களில் கடும் வெப்பம்

மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்றைய தினம் கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என்று வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  போதுமானளவு நீரைப் பருகுதல், நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல் வெள்ளை அல்லது மாநிறத்திலான மெல்லிய ஆடைகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும்.