இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாதர் முன்னணி தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாதர் முன்னணி தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டு நிகழ்வின் ஒரு அம்சமான மாதர் முன்னணி தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் போது மாதர் முன்னணியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாதர் முன்னணியின் செயலாளர் திருமதி வளர்மதி சுபாகரன் அவர்களால் வெளிப்பகர்வு செய்யப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பெண்கள் அரசியல் பிரதிநித்துவம் பல்வேறு மட்டங்களிலும் சமத்துவமான வாய்ப்புக்கள் கொண்டதாக இருப்பதனை உறுதிப்படுத்தல்.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கட்சிக் கட்டமைப்புக்குள் சமத்துவ அடிப்படையில் உள்ளடக்கப்படுதலை உறுதிப்படுத்தல்.

பிரதேச வாரியாக பெண்கள் வினைத்திறன் மிக்கதான பரிந்துரைத்தல் குழுக்களை உள்வாங்கி, உருவாக்கி அவர்கள் மூலமாக பெண்கள், சிறுவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டை உறுதி செய்தல்.

அங்கவீனமடைந்தோர், முன்னாள் போராளிகள், முதியோர் மற்றும் போரினால் தாக்கமடைந்தவர்களுக்கான உளவள ஆலோசனைகளோடு கூடிய வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

இலகுவில் பாதிக்கப்படக் கூடிய அல்லது பாதிப்புறு நிலையில் காணப்படும் பெண் தலைமை தாங்கும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நடத்தும் போராட்டங்களை பொதுவெளிக்குக் கொண்டு வருவதோடு பெண்கள் அதிகமாகக் காணப்படும் குடும்பங்களின் நிலைபேண் அபிவிருத்தியை உறுதி செய்தல்.

பெண்களின் கல்வி நிலையை பல்துறைகளில் தொழில் வாய்ப்பக்கு எற்புடையதாக, வழங்கக் கூடிய தொழில் வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி நிலையங்களோடு இணைந்து தொழிற் திறனை வளர்த்து, தரமானதாக மாற்றுதல்.

போன்ற அம்சங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.