விபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை – கண்டி பிரதான வீதி, பாலம் போட்டாறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை – முத்துநகர் பாலம், போட்டாறு பகுதியைச் சேர்ந்த சதுன் மதுசங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்ணனுடன் தம்பி பிரத்தியேக வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த டிமோ பட்டா சிறிய ரக லொறி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.