பெண்ணின் கழுத்திலிருந்த தாலி மாயம் : அம்பாறையில் சம்பவம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலி  திருட்டு போயுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

 

குறித்த சம்பவமானது திருக்கோவில் காயத்திரி கிராமம் 1 ஆம் வீதியிலுள்ள வீடு ஒன்றிலே இடம்பெ்ற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வினவியபோது வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த வேளை திருடன் வீட்டின் மேற்கு பக்கமாக உள்ள ஜன்னலைத் திறந்து அதனூடாக வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் தாலியைத் திருடி இருக்கலாம் என வீட்டார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

இதேவேளை மேற்படி குறித்த வீதியில் உள்ள மற்றுமோர் வீட்டிலிருந்து சிறுவர்கள் அணியும் மோதிரங்கள் மற்றும் உண்டியல் என்பனவும் திருட்டுப் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை இந்த சம்பவங்கள் தொடர்பாகத் திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.