களுவாஞ்சிக்குடியில் போதையற்ற நாடு! விழிப்புணர்வு பேரணி.

(எருவில் துசி) போதையற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவின் கீழ் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு
பேரணியுடன் அது தொடர்பான துண்டுப்பிரசூரம், ஸ்ரிக்கர்கள் என்பன ஒட்டும் செயற்பாடு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்வுகளை பிரதேச சபை தவிசாளர் அவர்களின் தலைமையில்  ஏற்பாடு செய்ய  சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேசசபை ஊழியர்கள் பொது மக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.