நாட்டின் சில பகுதிகளில் நாளை கடும் வெப்பம் நிலவும்

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நாளை (28) அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேவையான அளவு நீர் பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வௌ்ளை அல்லது இளநிறமான தளர்வான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.