வறுமைக்கான பிரதான காரணம் போதைப் பொருளாகும்’

மக்களிடையே வறுமை அதிகரித்துச் செல்வதற்கான காரணம், போதைப் பொருள்களே எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறந்த​தொரு நாட்டை கட்​டியெழுப்பும் நடவடிக்கையில் போதைப்பொருளுக்கு எதிரான முக்கியப் போராட்டமொன்று தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த போதை ஒழிப்புக்கு தேவையான வேலைத்திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.