62 வீடுகளுக்கும் மற்றும் கடைகளுக்கும் நட்ட ஈடு

மட்டக்களப்பு வவுணதீவு 4 கிராமங்களில்; மினி சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான

(சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4 கிராமங்களில் அண்மையில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான 62 வீடுகளுக்கும் மற்றும் கடைகளுக்கும் முதல் கட்ட ந~;ட ஈட்டுத் தொகையினை வழங்க அரச நிர்வாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார நடவடிக்கை அமைச்சு விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக ந~;ட ஈடுகளை வழங்க ஆவன செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் குறித்த அமைச்சுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனர்த்த நிவாரண அமைச்சர் மத்தும பண்டாரவின் அங்கீகாரத்துக்கமைவாக குறித்த ந~;ட ஈட்டினை வழங்க இந்த அமைச்சு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாகவழங்கப்பட்ட அங்கீகாரத்தில் இந்த முதல் கட்ட ந~;ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

வவுணதீவு கொத்தியாபுல பிரதேசத்தின் பலநோக்கு கட்டடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த ந~;ட ஈட்டுத் தொகையினை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் சம்பிரதாய பூர்வமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன் ,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.இளங்கோவன், அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் பி.சயந்தன் உட்பட்ட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மினி சுறாவளியினால் இப்பிரதேச செயலகப்பிரிவில் அடங்கும் கொத்தியாபுல,மண்டபத்தடி,காஞ்சிரங்குடா,புதுமண்டபத்தடி,இலுப்பட்டிச்சேனை ஆகிய கிராமங்களிலுள்ள 58 வீடுகளும் 4 கடைகளும் பகுதியளவில் சேதமாயிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.