மட்டக்களப்பில் வரட்சியான சூழலில் குடிநீர்,விவசாயத்துக்கு உன்னிச்சை நீரைப்பகிர இணக்கப்பாடு.

(சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு உன்னிச்சை நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மற்றும் நீhப்;பாசன விவசாய நெற் செய்கைக்கு தற்போது நிலவும் வரட்சியான சூழலில் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செய லகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தி;ல் உன்னிச்சை மத்திய நீர்பாசன திட்டத்தின் எந்திரி எஸ்.நிரோஜன்,தேசிய நீர்வழங்கல் வடிகால மைப்பு சபை யின் மாவட்ட முகாமையாளர் எந்திரி ரீ.பிரகாஷ் ,உன்னிச்சை குழுவின் தலைவர் கே.யோகவேல் மற்றும் 20 விவ சாய குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தற்போதைய வரட்சியான சூழலில் உன்னிச்சை குளத்தில் தேங்கியிருக்கும் 2800 அடி ஏக்கர் கொள்ளளவு நீரைகுடி நீருக் கும், விவசாய நீர்பாசனத்துக்கும் பகீர்ந்தளிப்பது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

தற்போதைய வரட்சியான சூழலில் மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு பாதகம் இல்லாத வகையில் சுமூகமான தீர்வு ஒன்றினை எடுப்பதற்கு விவசாய குழு பிரதிநிதி கள் முன்வர வேண்டும் என அரசாங்க அதிபரால் ஆலோசனை தெரிவிக் கப்பட்டது

இதற்கமைவாக தற்பொழுது உன்னிச்சை குளத்தில் தேங்கி யுள்ள சுமார் 2800 அடி ஏக்கர் நீர் கொள்ளவில் சுமார் 2000 அடி ஏக்கர் கொள்ளவினை குடி நீருக்காகவும், மிகுதியான 800 அடி ஏக்கர் நீரினை விவசாய செய்கைக்கும் பயன்படுத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் மழைநீர்கிடைக்குமாயின் இத்திட்டத்திற்கு உள்ளடக்கும் விவசாயிகள் நீர்பாசனத்துக்கு தட்டுப்பாடுநிலவாது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இம் மாவட்டத்தில் குறித்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை ஆரம்பக்கூட்டத்தில் உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பிரதேசத்தில் 3708 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் இப்பிரதேசத்தில் மேலதிகமாக 65 ஏக்கர் நெற்செய்கை மேலதிக மேற்கொள்ளப்பட்டதாவும் இதே போல் உன்னிச்சை இடது கரை வாய்க்கால் பிரதேசத்தில் பயிர் செய்கை ஆரம்ப கூட்டத்தில் 4495 ஏக்கரில் நெற்செய்கை மேற் கொள்வது என தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் மேலதிகமாக 65 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விவசாய பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் இப்பிரிவில் உன்னிச்சை ஆற்றுப்பாச்சல் நீர்பாசன திட்டத்தின் ஊடாக 3617 ஏக்கரும் மண்டபத்தடி கமநலச்சேவை கேந்திர நிலையப்பிரிவில் 800 ஏக்கரும் ஆயித்தியமலை கம நலப் பிரிவில் 85 ஏக்கர் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் உன்னிச்சை குடி நீர் திட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற குடிநீர் திட்டத்திற்கு பாதிப்பில்லாத வகையில் குடி நீர் வழங்க விவசாயிகள் இணங்கிக் கொண்டதற்குமாவட்ட அரசாங்கஅதிபரால்விவசாயபிரதிநிதிகளுக்குபாராட்டுதெரிவிக்கப்பட்டது.

ஏதிர்காலத்திலும் மக்களின் அத்தியாவசிய குடிநீரை வழங்கு வதற்கான தீர்மானங்கள் மேற்கொள்வதற்கு விவசாய பிரதிநிதி கள் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அத்துடன் அடுத்த வருடத்திலிருந்து பயிர்செய்கை ஆரம்பகூட் டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைமீறிமேலதிகநெற்செய்கையில் ஈடுபட விவசாயிகள் முன்வரகூடாது என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.