சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் மகள் கல்முனை நீதிமன்றில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் மகள் பலத்த இன்றையதினம் -26- கல்முனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்போது, கல்முனை நீதவான் நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி முன்னிலைப்படுத்தப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன்னர், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து அவர் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் தன்னுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் குறித்து பல விடயங்களை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்போது அவருடன், சஹ்ரானின் மகளும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துவரப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.