வர்த்தக தொழிற் துறையில் சாதனைகளை எட்டிய வாழைச்சேனையைச் சேர்ந்த ரபியூல்தீனுக்கு சர்வதேச விருது

சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற Business World International Organization (BWIO) நிறுவனத்தினால் அதன் தலைவர் Prof.Dr.A. Dexter Fernando தலைமையில் Business World International Award 2018 சர்வதேச விருது வழங்கும் நிகழ்வனாது ஜுன் மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கடந்த 2018அம் ஆண்டு வர்த்தக தொழிற் துறையில் சாதனைகளை எட்டியவர்களுக்காக பல தரப்பட்ட பிரிவின் கீழ் இலங்கை பூராகவும் சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனடிப்படையில் 2018ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த இளம் வர்த்தகருக்கான பிளாட்டினம் விருதானது வாழைச்சேனை சதாம் சுப்பர் மார்க்கட் மற்றும் வாழைச்சேனை வெல்கம் பூட் சிட்டி உரிமையாளருமான எம்.எம். ரபியூல்தீனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்தில் தன்னுடைய அயராத முயற்சியின் காரணமாக குறுகிய காலத்தில் இரு வெவ்வேறு இடங்களில் சதாம் சுப்பர் மார்க்கட் மற்றும் வெல்கம் பூட் சிட்டி ஆகிய நிறுவனங்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தன்னாலான சேவையினை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றமையினால் இவ்விருதானது இவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்தில் இவ்வாறு சர்வதேச விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.