கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாகவே ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் என  கவீந்திரன் கோடீஸ்வரன்    தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்படாமல் இருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அவர்கள் இன்று  அக்கரைப்பற்றிலுள்ள தனது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதமிருந்த மதிப்பிக்குரிய மதகுருமார் உண்ணாவிரதமிருந்தார்கள் உண்மையில் கல்முனை வடக்கு பிரதே செயலமானது ஏனை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாக ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் .
தமிழர்கர்கள் ஏனைய சமூகளைப்போல் சுயாதீனமாக தங்களது உரிமைகளை பெற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள். முல்லிங்களினாலே தமிழர்கள் உரிமைகளை பெறக்கூடாது என்ற  குறுகிய எண்ணம், சிந்தனையினடிப்படையிலே அந்த இஸ்லாமிய அரசியல் அடிப்படை தீவிரவாதிகள் தமிழர்கள் நியாயமான போராட்டதை முன்னெடுக்கின்றபொழுது எதிராக சாக்கடைத்தனமாக கோளைத்தனமா   களியாட்ட போராட்டத்தை நடார்த்தி மேற்கொண்டிருந்திருந்தார்கள் உண்மையில் வேதனையானது.
வடக்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்போடு கூடிய பிரதேச செயலகம். முஸ்லிம் அரசியல் வாதிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பற்ற முறையில் இருப்பதாக  ஒரு மாயையை வெளி உலகிற்கு  பொய்யான பிரச்சாரத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
கல்முனை தெற்கு பிரதேச செயலகம்தான் நிலத்தொடர்பற்ற முறையில் கல்முனைக்குடி ஒருபக்கம் மருதமுனை ஒருபக்கமும் நற்பிட்டிமுனை ஒருபக்கமும் பல கிலோமீற்றர் விசாலமாக இருக்கின்றது தமிழ் பிரதேச செயலகம் நிலத்தொடர்புடன் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றதை அறியாதவர்களாக இருக்கின்றனர் அடிப்படைவாதிகள்.
தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமத்தில் அடாவடியாக இஸ்லாமபாத் என்ற கிராமம் அமைக்கப்பட்டு தமிழ்ப்பிரதேசங்கள் சத்தமில்லாமல்  அபகரிக்கப்பட்டுள்ளன.
2002 இல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனி பிரதேச செயலகம் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திலிருந்து பிரித்து கொடுக்கப்பட்ட போது தமிழ் மக்கள் கோரும் உரிமைகள் வலுவானது.
மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் :
ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்களோ, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் போன்றோர் இதுவரை பாராளுமன்றத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்  தரமுயத்துவது சம்பந்தமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கவில்லை .
கல்முனை வடக்கு உண்ணாவிரத தளத்திற்கு அமைச்சர்கள் ,ம.சுமந்திரன் அவர்கள் வருவதற்கு முன்பே பல அரசியல் திட்டங்கள் எமக்கெரிராக தீட்டப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ஷவிடம் ஒட்டுமொத்த இனத்தையும் காட்டி கொடுத்த கருணா,பிள்ளையான் போன்றோரின் அடிவருடிகள் தமிழ்த்தேசியத்திற்கெதிரான சக்திகள் பல அடிப்படைவாத அமைப்புகளுடன் சேர்ந்து புனிதமான உண்ணாவிரத போராட்டத்தினை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர் மனோகணேசன்  ,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இணைந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டு நொந்துபோய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற உறவுகளை சந்தித்து கலந்துரையாடிவேளையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் தயா கமகே தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முஸ்லிம் அடிப்படை வாதிகள்  மேற்கொண்ட கேளிக்கை போராட்டத்தில் கலந் ஆதரவு தெரிவித்தபின் இங்கு வந்தமையாலே சலசலப்பு ஏற்பட்டது என்பனை எமக்கு தெரிவித்தார்.