மட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானர்.

குறித்த நபர் புதுமண்டபத்தடியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி தவராசா (வயது 62 )  என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமண்டபத்தயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிலுக்கு பெற்றோல்  நிரப்பிவிட்டு பிரதான வீதிக்கு செல்கையில் பிரதான வீதியால் வந்த வேகமாக வந்த மற்றுமோர் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டதில் குறித்த நபர் ஸ்தலத்திலே பலியானார். மற்றயவர் மிக மோசமாக படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.