நாடு பிரி­வதை தடுக்க அதி­காரப் பகிர்வே ஒரே வழி என்­கிறார் சம்­பந்தன்

அன்­றைய கண்­டியத் தலை­வர்­களின் கோரிக்­கையை நாங்கள் அப்­போது ஆத­ரிக்­க­வில்லை. அவ்­வாறு ஆத­ரித்­தி­ருந்தால் இந்­தப்­பி­ரச்­சினை எப்­போதோ தீர்ந்­தி­ருக்கும். தமிழ் மக்கள் பெரும்­பான்மைத் தலை­வர்­களை நம்­பி­னார்கள். அதன் கார­ண­மா­கத்தான் பூர­ண­மான சுதந்­திர ஆட்­சியைக் கேட்­டார்கள்.

 

ஆட்­சியில் தொடர்ந்து இருந்து வந்த பேரி­ன­வாத தலை­வர்கள் மொழி,காணி,பொரு­ளா­தாரம், வேலை­வாய்ப்பு போன்ற கார­ணி­களில் எம்­மத்­தியில் வேற்­று­மையை ஏற்­ப­டுத்தி இன்று தமி­ழர்கள் தனி நாடு கேட்கும் நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார்.

அண்மைக் கால­மாக ஒரு அர­சியல் தீர்­வைக்­காண நாம் பெரும் முயற்­சி­களை மேற்­கொண்டோம். அதில் கணி­ச­மான முன்­றேத்­தையும் கண்டோம். அது முடி­வுக்­கு­வ­ர­வில்லை. ஆகவே இந்த விட­யங்­களை மக்கள் உண­ர­வேண்டும். அதற்கு ஊட­கங்கள் இந்த விட­யங்­களை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­ல­வேண்டும். நாடு பிரி­வதை தடுப்­ப­தற்கு ஒரே ஒரு வழி அதி­காரப் பகிர்­வே­யாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­ட­பத்தில் நேற்று மாலை திரு­கோ­ண­மலை மாவட்ட ஊட­க­வி­ய­லாளர் சங்­கத்­தினால் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தக­வ­ல­டங்­கிய நூலொன்று வெளி­யி­டப்­பட்­டது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் இவ்­வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

எமது நாடு இன்று கடன் சுமையில் மூழ்­கி­யுள்­ளது. எமது நாட்டின் வரு­மா­னத்­தைக்­கொண்டு நாம் முன்­னேற முடி­யாத நில­மைக்­குத்­தள்­ளப்­பட்­டுள்ளோம். இந்­நி­லை­மை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளவை எமது நாட்டில் நிலவும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மை­யின்­மை­யே­யாகும்

இவ்­வா­றான நிலை­மையில் இருந்து இந்த நாடு மீள்­வ­தற்கு ஊட­கங்­களும் சிறந்த முறையில் பங்­காற்ற வேண்டும். தமிழ் ஊட­கங்கள்,சிங்­கள ஊட­கங்கள் மக்கள் மத்­தியில் உண்மை நிலை­வ­ரங்­களை கொண்டு செல்ல வேண்டும். உண்­மைக்குப் புறம்­பா­ன­வற்றை கொண்டு செல்­லக்­கூ­டாது. ஊட­கங்கள் உண்மை நிலை­மை­களை மக்­க­ளுக்கு கொண்டு செல்­லு­கின்ற போது அவர்கள் தமது நாட்டின் எதிர்­காலம் தொடர்­பாக தீர்­மா­னங்­களை சிறந்த முறையில் எடுப்­பார்கள்.

ஒரு நாடு சிறந்த ஜன­நா­யக நாடக திகழ்­வ­தற்கு, நாட்டின் இரண்டு அமைப்­புக்கள் மிகவும் சுதந்­தி­ர­மான வகையில், இயங்க வேண்டும். அதில் ஒன்று முக்­கி­ய­மாக நீதித்­து­றை­யாகும். மற்­றை­யது ஊட­கத்­து­றை­யாகும்.

இவ்­விரு துறை­களும் சிறந்த முறையில் சுதந்­தி­ர­மாக இயங்­கு­மாக இருந்தால் அந்த நாட்டின் ஜன­நா­யகம் பேணிப் பாது­காக்­கப்­படும். அத­ன­டிப்­ப­டையில் ஊட­கத்­திற்கு மிகவும் பெரும் பங்­குள்­ளது. இத­னைப்­பு­ரிந்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும். ஊட­கங்­களும் செயற்­ப­ட­வேண்டும்.

நாட்டு மக்­களின் ஒற்­று­மை­யான செயற்­பாட்­டிற்கு ஊட­கங்கள் பங்­க­ளிக்க வேண்டும். இன்று இந்­நி­கழ்வை மூவி­னத்­தையும் சார்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒற்­று­மை­யாக ஒன்­றி­ணைந்து மிகவும் சிறப்­பாக மிகவும் முன்­மா­தி­ரி­யாக நடத்­து­வ­தனைப் பார்க்­கின்­ற­போது மிகவும் மகிழ்­சி­யாக இருக்­கின்­றது.

சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலத்தில் இந்த நாட்டில் ஒற்­று­மை­யாக செயற்­பட தமிழ்த்­த­லை­வர்கள், சிங்­க­ளத்­த­லை­வர்கள்,முஸ்லிம் தலை­வர்கள் மிகவும் முன்­மா­தி­ரி­யாக செயற்­பட்­டார்கள். அவர்கள் ஒரு நாட்டு மக்­க­ளாக செயற்­பட்­டார்கள். இலங்­கைத்­தீவு அவ­ரவர் கலா­சார பண்­பாட்டு ரீதி­யாக வெவ்­வேறு பகு­தி­க­ளாக பிரிந்­துள்­ளது.ஆனாலும் அந்­நியர் ஆட்­சியில் இருந்து விடு­பட ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டார்கள்.

அந்­தக்­கா­லத்தில் யாழ்ப்­பாணத் தமிழ் மக்கள் பூரண சுதந்­திர ஆட்­சியைக் கேட்­டார்கள். கண்­டியை மைய­மா­கக்­கொண்ட தலை­வர்கள் பூரண சுயாட்சி கேட்­டார்கள். அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் நாட்டைப் பிரித்­துக்­கேட்க வில்லை.

அன்­றைய கண்­டியத் தலை­வர்­களின் கோரிக்­கையை நாங்கள் அப்­போது ஆத­ரிக்­க­வில்லை. அவ்­வாறு அத­ரித்­தி­ருந்தால் இந்­தப்­பி­ரச்­சினை எப்­போதோ தீர்ந்­தி­ருக்கும் .தமிழ் மக்கள் பெரும்­பான்மைத் தலை­வர்­களை நம்­பி­னார்கள். அதன் கார­ண­மா­கத்தான் பூர­ண­மான சுதந்­திர ஆட்­சியைக் கேட்­டார்கள்.

ஆட்­சியில் தொடர்ந்து இருந்து வந்த பேரி­ன­வாத தலை­வர்கள் மொழி,காணி,பொரு­ளா­தாரம், வேலை­வாய்ப்பு போன்ற கார­ணி­களில் எம்­மத்­தியில் வேற்­று­மையை ஏற்­ப­டுத்தி இன்று தமி­ழர்கள் தனி நாடு கேட்கும் நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

இத­ன­டிப்­ப­டையில் பல்­வேறு ஒப்­பந்­தங்கள் செய்­யப்­பட்­டன. அவை அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­டாத நிலைமை ஏற்­பட்­ட­தனால். துர­திஸ்ர வச­மான பெரும் போர் நிலை­மையும் ஏற்­பட்டு அழி­வு­களை,பொரு­ளா­தார அழி­வு­களை இந்த நாடு சந்­தித்­தது.

1956 ஆம் ஆண்டு தொடக்கம் இற்­றை­வரை தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டா­மை­யினால் இந்­நி­லை­மைகள் ஏற்­பட்­டன. ஆயினும் இந்­தி­யாவின் பிர­தம மந்­திரி திரு­மதி இந்­திரா காந்­தியின் முயற்­சி­யினால் எமது மக்கள் மத்­தியில் ஒரு ஒற்­ற­மைக்­கான முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அது பின்னர் அவ­ரது புதல்­வ­ரான ராஜீவ் காந்­தியின் ஆட்­சி­யிலும் தொடர்ந்­தது. அதன்­ப­ய­னாக தமிழ் மக்கள் அதனை பூர­ண­மாக விரும்­பா­விட்­டாலும் இந்­தி­யாவின் தலை­யீடு கார­ண­மாக இந்­திய, இலங்கை உடன்­பாடு மூலம் 13ஆவது திருத்­தச்­சட்டம் மூலம் மாகாண முறைமை நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதனை பூர­ண­மாக அமு­லாக்க வேண்டும் என சர்­வ­தேச சமூ­கமும் இந்­தி­யாவும் கோரி­நிற்­கின்­றன. அது பூர­ண­மாக அமு­லுக்கு வரு­வதன் மூலம் இந்த நாட்டில் ஓர­ள­வேனும் ஒற்­றுமை சாந்தி சமா­தானம் நில­வுக்­கூ­டிய சூழல் இருந்­தது. ஆனால் அதுவும் கூட பூர­ண­மாக அமுல்­ப­டுத்­தாத நிலமை தொடர்­கின்­றது.

இந்த நாட்டில் உள்ள இனங்­க­ளுக்­கி­டையில் உள்ள பிணக்­குகள் முடி­வுக்­கு­வர வேண்டும். அது முடி­வுக்கு வரா­ததன் கார­ணத்­தி­னால்தான் இன்று பல பகு­தி­க­ளிலும் குழப்­ப­க­ர­மான நிலை­மைகள் தொட­ரு­கின்­றன.

எம்­மோடு சுதந்­திரம் பெற்ற பல நாடுகள் இன்று சுபீட்­ச­மாக வளர்ந்து வரு­கின்­றன. ஆனால் எமது நாடு இன்னும் பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றது.

பெரும் கடன் சுமை,பொரு­ளா­தார நெருக்­கடி நாட்டில் முன்­னேற்­ற­மற்ற நிலை­மைகள் தொடர்­கின்­றன. அண்மைக் காலமாக ஒரு அரசியல் தீர்வைக்காண நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் கணிசமான முன்றேத்தையும் கண்டோம். அது முடிவுக்குவரவில்லை. ஆகவே இந்த விடயங்களை மக்கள் உணரவேண்டும். அதற்கு ஊடகங்கள் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

நாடு பிரிவதை தடுப்பதற்கு ஒரே ஒரு வழி அதிகாரப்பகிர்வேயாகும். அதனை செய்வதன் மூலமே இந்த நாடு சுபீட்சம் பெறும். இந்நிலைமையை ஏற்படுவதற்கு ஊடகங்கள் மக்களுக்கு உண்மை நிலைவரங்களை உணர்த்த முன்வரவேண்டும். விசேடமாக சிங்கள மக்களுக்கு ஏன் தமிழ்பேசும் மக்களுக்கும் கூட இந்த நாட்டின் நிலமைகள் தெளிவூட்டப்பட வேண்டும் அது உங்களது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.