குருகேத்திரன்போர் அரங்கேற்றம்

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினால் ஆற்றுகை செய்யப்பட்ட குருகேத்திரன்போர் வடமோடிக்கூத்து அரங்கேற்ற நிகழ்வு நேற்று இரவு(22) இடம்பெற்றது.

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.

நாகசக்தி கலைமன்றத்தினால் வருடாந்தம் ஒவ்வொரு கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மத்தள அண்ணாவியார், ஏட்டண்ணாவியார், களரிமுகாமையாளர் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர்.