தமிழர்களின் போராட்டம் முடிவுபெற்றதால் நாமும் முடிக்கின்றோம்.ஆனால் விழிப்பாக இருப்போம்.முஸ்லிம் காங்கிரஸ்.

0
663
தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதனால் தாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை நாம் விழிப்பாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன் சத்தியாக்கிரகம் நிறைவுக்கு வந்தது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.