கல்முனை உண்ணாவிரதம் முழுமையாக நிறைவு பெற்றது.

கல்முனை உண்ணாவிரதத்தை போராட்டக்காரர்கள் முழுமையாக இன்று காலைமுதல் நிறுத்தியுள்ளனர் .

மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குவோமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக நேற்றிரவு தொடக்கம் ஏற்பாட்டாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இன்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. தற்போது அந்த அறிக்கையை வெளியிட்டு, போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

கல்முனையை தரமுயர்த்துவதாக அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக, தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று (22) ஞானசார தேரர் போராட்டக்களத்திற்கு வந்து, வாக்குறுதியளித்து போராட்டத்தை முடித்து வைத்தார். ஞானசாரரின் வாக்குறுதியையடுத்து நால்வர் போராட்டத்தை கைவிட்டனர். ஒருவர் மாத்திரம் நீராகாரம் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தை கைவிட்ட நால்வரும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் நேற்று மாலையே மீண்டும் போராட்ட இடத்திற்கு வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை அனைவரும் போராட்டத்தை கைவிடுவதாக கூட்டாக அறிவித்து, அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

நேற்று மீண்டும் போராட்டம் ஆரம்பித்த பிறகு கல்முனை உண்ணாவிரதிகளை தொடர்புகொண்ட ஞானசார தேரர் , தாம் ஒரு வாக்குறுதி தந்த பின்னரும் உண்ணாவிரதத்தை தொடர்வது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்ததாக அறியமுடிந்தது.ஞானசார தேரரின் அதிருப்தியின் பின்னரே உண்ணாவிரதம் இன்று காலை முடிவுக்கு வந்ததாக அறியமுடிந்தது.

Thanka

thamilan.lk