ராஐன் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

பாறுக் ஷிஹான்
கல்முனை  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீர் கொடுத்து கலகொட ஞான சார தேரர் முடிவுறுத்தி வைத்தார்.

இன்று (22)  கல்முனை பகுதிக்கு சுமார் 50 க்கும் அதிகமான பிக்குகளுடன் வந்த தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி மொழி ஒன்றை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை தவிர ஏனைய உண்ணாவிரதிகள் தேரரின்  உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
எனினும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாத்திரம் சாகும் வரை உண்ணாவிரத்தை தொடர்வதாக கூறினார்.
இதன் போது உண்ணாவிரத முன்றலில் உரையாற்றிய தேரர் அங்கு ஒன்று கூடிஇருந்த மக்களிடம் நம்பிக்கை ஊட்டக்ககூடிய  உரையினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையின் பின்னர் அங்கிருந்த மக்களை சந்தித்து ஆசிர்வாதம் வழங்கினார்.
  கல்முனைக்கு விஜயம் செய்த தேரருக்கு   பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநகர சபை உறுப்பினரின் முடிவினை ஏற்ற ஏனைய உண்ணாவிரதிகளும் அடையாள உண்ணாவிரதத்தை தற்போது தொடருகின்றனர்